Home / அரசியல் / கரூரில் நடந்த துயர சம்பவம் – இனி இதுபோல் தமிழ்நாடு மட்டுமல்ல நம் நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது, மத்திய அரசின் பிரதிநிதியாக மட்டுமே வந்துள்ளோம். மற்ற விசயங்களை பேச வரவில்லை.

கரூரில் நடந்த துயர சம்பவம் – இனி இதுபோல் தமிழ்நாடு மட்டுமல்ல நம் நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது, மத்திய அரசின் பிரதிநிதியாக மட்டுமே வந்துள்ளோம். மற்ற விசயங்களை பேச வரவில்லை.

மாநில அரசின் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை அவர்களிடம் சொல்லுங்கள் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

கரூரில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் கூடிக்கொண்டே வருகிறது.
சமூக வலைதளங்கள் மூலம் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தோம்.
ஆனால், எங்களை அனுப்பி ஆறுதல் தெரிவிப்பதோடு, சிகிச்சை குறித்து விசாரிக்க பிரதமர் அனுப்பி வைத்தார்.

சம்பவ இடத்தை பார்வையிட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களை சந்தித்தோம். உயிரிழந்த சிலர் குடும்பங்களை பார்த்தோம். அவர்கள் வருத்தத்தை எங்களால் விவரிக்க முடியவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பத்தினர்.

இனி இதுபோல் ஒரு சம்பவம் நம் நாட்டில் நடைபெற கூடாது. அவர்கள் துக்கத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நாங்கள் நேரில் பார்த்தவற்றை உள்துறை அமைச்சரிடம் விவரிப்போம்.

இந்த சம்பவம் மனதை உலுக்குகிறது. பிரதமர் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டார்.
இன்று இரவுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் நிவாரண உதவி வரவு வைக்கப்படும். நான் இங்கு வந்தது பிரதமர் சார்பில் இங்குள்ள நிலை குறித்து தெரிந்து கொள்ள மட்டும்தான்.

யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் பிரதிநிதியாக வந்துள்ளோம். மற்ற விசயங்களை பேச வரவில்லை.

இனிமேல் தமிழ்நாடு மட்டுமல்ல, நம்நாட்டில் இதுபோல் எங்கும் நடக்கக்கூடாது. மக்களுக்கு எங்கள் பயணத்தின் மூலமாக நம்பிக்கை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. நடந்த சம்பவம் பற்றி தெரிந்துகொள்ள மட்டுமே வந்தோம்.

மாநில அரசின் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை அவர்களிடம் சொல்லுங்கள் என்றார்

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *