Home / அரசியல் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சேலத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கீரப்பாப்பம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பெரியண்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெரியண்ணன், தமிழக அரசு பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியதுடன், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதே வழிகாட்டுதல்படி தான் 35 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் தெளிவு படுத்தினர். விவசாயிகளை ஏமாற்றும் நிலை தொடர்ந்தால், பயிர் கடனை செலுத்தலாமா வேண்டாமா என்று முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார். விலையில்லா மின்சாரத்திற்காக போராட்டம் நடத்தி 54 விவசாயிகள் இன்னுயிர் கொடுத்தது பெற்றது போல், தற்போதும் உயிரை விடுவதற்கும் நாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *