Home / அரசியல் / கல்விக்கடன் வழங்க மறுக்கும் வங்கி மேலாளர், வீட்டுமனை பட்டா வழங்காத தாசில்தார் ஆகியோரை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

கல்விக்கடன் வழங்க மறுக்கும் வங்கி மேலாளர், வீட்டுமனை பட்டா வழங்காத தாசில்தார் ஆகியோரை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர் புரட்சி பாரதம் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் வேப்பம்பூண்டி காசி விஸ்வநாதன் தலைமையில் ஆத்தூர் ராமதாஸ் ஆகியோருடன் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்துள்ளனர் இந்த நிலையில் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த 48 பேருக்கும் வீரகனூர் பகுதியைச் சேர்ந்த 11 பேருக்கும் வீட்டுமனை வழங்க இடம் தேர்வு செய்தோம் இதுவரை பட்டா வழங்கவில்லை இதுகுறித்து தலைவாசல் வட்டாட்சியரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதே நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தலைவாசல் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் ஹரிதாஸ் என்பவர் பயோமெடிக்கல் இளங்கலை பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார் இந்த கல்லூரியில் கல்வி கடன் பெறுவதற்காக 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர் இந்த நிலையில் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள கனரா வங்கியில் கல்விக் கடன் கோரி இரண்டு முறை மனு கொடுத்துள்ளார் ஆனால் பிளஸ் டூ தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறி வங்கி மேலாளர் கல்வி கடன் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த மாணவன் கல்லூரி படிப்பை தொடர முடியாத சூழ்நிலை நிலவுகிறது எனவே தாழ்த்தப்பட்ட ஏழை மாணவனின் கல்வியை பாதையில் நிறுத்தாதவாறு கல்வி கடன் வழங்க வங்கி மேலாளருக்கு உத்தரவிட வேண்டும் முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அனைவரையும் தடுத்து நிறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய புரட்சி பாதம் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் பேசும்போது,

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வருகிறோம் இலவச வீட்டு மனை வழங்குவதற்கு இடம் தேர்வு செய்த பிறகும் தலைவாசல் வட்டாட்சியர் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார் இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார் மேலும் தாழ்த்தப்பட்ட ஏழை மாணவனுக்கு சிறுவாச்சூர் கனரா வங்கி மேலாளர் கல்விக்கடன் வழங்க மருத்து வருகிறார் இதனால் ஏழை மாணவரின் உயர்கல்வி படிப்பு பாதியிலேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது உடனடியாக இதன் மீது கவனம் செலுத்தி கல்வி கடனை வழங்குவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *