Home / அரசியல் / அதிமுக உரிமை மீட்பு குழு போஸ்டர்கள் சிவகாசியில் பரபரப்பு – ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, செங்கோட்டையன் படங்களுடன் ஒன்றுபடுவோம் வாசகம்

அதிமுக உரிமை மீட்பு குழு போஸ்டர்கள் சிவகாசியில் பரபரப்பு – ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, செங்கோட்டையன் படங்களுடன் ஒன்றுபடுவோம் வாசகம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க கோரி அக்கட்சி தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

அவரையும் கட்சி அனைத்து பொறுப்பு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,

இதனை தொடர்ந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், ஆதரவாளர்கள் நேரில் சந்தித்தும் வாழ்த்து மற்றும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் பல்வேறு பகுதிகளில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அப்போஸ்டரில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய படங்களுடன் கூடிய ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என்ற வாசகத்துடன் அதிமுக புரட்சித்தலைவி அம்மாவின் நூற்றாண்டு கால கனவை நிறைவேற்ற கழக மூத்த முன்னோடி செங்கோட்டையனின் முயற்சிக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றி என்றும் விருதுநகர் மத்திய மாவட்டம் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *