Home / அரசியல் / நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு போதுமானது – பிரதமர் தமிழகத்துக்கு நிவாரணம் தரவில்லை என அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு போதுமானது – பிரதமர் தமிழகத்துக்கு நிவாரணம் தரவில்லை என அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர்மாவட்டம்,வேலூர் சேண்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது இம்முகாமினை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேயர் சுஜாதா ஆகியோர் முகாமினை ஆய்வு செய்ய வந்த போது முள்ளிப்பாளையம் பகுதி மக்கள் அமைச்சர் துரைமுருகனை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் அதிகாரிகளிடம்பல முறை புகார் கூறியும் செய்யவில்லை என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கிருந்த ஆட்சியர் நானே வந்து நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் அப்போதும் மக்கள் கேள்வி கேட்டு முற்றுகையிட்டனர் சொந்த தொகுதி மக்களே அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது


பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு பணிகள் இன்னும் கிடப்பில் உள்ளதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு நந்தன் கால்வாய் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்காளர் அதிகம் பீகாரில் நீக்கம் செய்ததை போல் தமிழகத்தில் வாக்காளர்களை நீக்கம் செய்ய முடியாது தமிழகம் பீகார் அல்ல திமுக கூட்டணி தேர்தலுக்குள் சிதறிவிடும் என எடப்பாடி பேசுவது குறித்த கேள்விக்கு அவர் எதாவது பேச வேண்டுமென பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கூறியது குறித்து கேள்விக்கு அவர் எதிர்க்கட்சி அவர்கள் பக்கம் தான் பேசுவார் எங்கள் பக்கமா பேசுவார் மற்ற மாநிலங்களில் வெள்ள நிவாரணம் அளித்ததை போல் பிரதமர் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் அளிக்கவில்லை பிரதமர் எல்லா மாநிலத்தையும் ஒரே மாதிரி நினைப்பாரா என்பது சந்தேகமாக உள்ளது ஆனால் நிலைமையும் அப்படி தான் உள்ளது என கூறினார்

Tagged: