நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தென் தமிழகத்தில் தொழில் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் போன்றவை வளர்ச்சி அடையாமல் இருக்கிறது. தென்தமிழகம் சென்னை போன்ற வடதமிழகத்தை போலவும் மேற்கு தமிழகத்தை போலவும் வளர்ச்சி அடையவில்லை வேலைவாய்ப்பு தொழில் ஆகியவை தென் மாவட்டங்களுக்கு கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து புதிதமிழர்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் உள்ளூர் மக்களுக்கு தான் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறோம் உள்ளூர் மக்களை தொழிற்சாலைகள் புறக்கணித்து வருகிறது ஒரிசா பீகார் ஆந்திரா மக்களுக்கு தான் வேலை வழங்கப்பட்டு வருகிறது அனைத்து சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து 50 முதல் 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் வரும் 26 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் பல கிராமங்களில் செயல்படாமல் இருந்து வருகிறது தொழிற்சாலைகளே இல்லாமல் இருக்கும் தென் மாவட்டங்களில் வேளாண்மையும் சரிவர இல்லாமல் இருப்பதால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டமும் சரிவர பலருக்கு வழங்கப்படவில்லை இதில் பெரிய முறைகேடு நடந்துள்ளது மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் 1967 க்கு முன்னர் இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி செய்து வந்தது அதற்குப்பின் அந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை இருந்ததைப் போல் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை தற்போது ஒவ்வொரு வாக்காளர் பட்டியிலும் இருந்து வருகிறது அந்த உணர்வின் வடிகாலாய் விஜய் இருக்கிறார் அதன் காரணமாகவே பெண்களும் இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள் விஜய் மட்டுமே ஆட்சி அமைப்பது கடினம் நல்ல நண்பர்களை சேர்த்துக் கொண்டால் தேர்தலில் நல்ல வியூகத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். கிராமங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகப்படியாக காணப்படுகிறது சமூக வேறுபாடுகள் இருந்த இடத்தில் எப்போது பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் நடக்கக்கூடிய எந்த பிரச்சனையையும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் முதலமைச்சர் தெரிவிப்பதில்லை யதார்த்தமான உண்மை நிலையை கூட எடுத்து சொல்வது கிடையாது மக்கள் வறுமையின் உச்சத்தில் உள்ளனர். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைப்பதற்கான எந்த வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வில்லை. இப்போதுள்ள அமைச்சர்களாலும் சட்டமன்ற உறுப்பினர்களாளும் தமிழகத்தின் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மாற்ற முடியாது. எங்களைப் போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைக்கு வந்தால் தான் அடித்தட்டு மக்களின் வாழ்வு ஆதார் பிரச்சனைகளை மாற்ற முடியும். ஆட்சியில் பங்கு என்பதை நாங்கள் சொல்வது வெற்றி கோசம் அல்ல. ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பதுதான் 2026 தேர்தல் களம். 2026 இன் தமிழக அரசியல் களமே கூட்டணி ஆட்சியில் தான் இருக்கும். கேரளா ஆந்திர மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு சாத்தியமாகும் போது தமிழகத்திலும் அது சாத்தியமாகும். புதிய தமிழகம் கட்சி கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை ஜனவரி மாதம் மாநில மாநாட்டில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதே போன்று இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சாரார் மட்டுமே வளர்ந்து கொண்டே போனால் தமிழகத்திலும் கொந்தளிப்பு உருவாகத்தான் செய்யும். அதன் வெளிப்பாடாக 2026 இல் ஆட்சி மாற்றம் வரும் செங்கோட்டையன் விவகாரம் அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை அவர்களுக்குள்ளேயே அவர்கள் பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்
ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்களின் வடிகாலாய் விஜய் இருக்கிறார் அதனால் பெண்கள் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள் என நெல்லையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி






