திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.இ. குமரன் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வருகை தந்தார்
தெலுங்கானா முன்னாள் ஆளுநர் , தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு சிறப்பான வரவேற்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் அஸ்வின் குமார் தலைமையில் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார் திருக்கோயில் சார்பில் அவருக்கு மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்கள்
இதனைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.இ. குமரன் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் தமிழிசை சௌந்தர்ராஜன் இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இவர் பேசியது
தமிழகத்தில் நல்ல கூட்டணி பாஜக அமைத்துள்ளது தமிழகத்தில் மக்கள் பிரச்சனையில் வாடிக் கொண்டிருக்கின்றனர் ஆகையால் அதிமுக பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும்
மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லவில்லையா என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் முன் வைத்தனர்
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விபத்திற்கு யார் கள்ள சாராயம் விபத்திற்கு கண்டித்து யார் அங்கு சென்றது என்று தமிழிசை சௌந்தரராஜன் வினா எழுப்பினார்
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது பட்டியல் இன மக்களுக்கு தமிழகத்தில் அதிக தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது என்ன சமூக நீதி தமிழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தமிழக மக்களை கேட்டுக் கொள்வதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வைத்து அரசியல் செய்ய வேண்டாம் உண்மையில் ஆம்புலன்ஸில் நோயாளிகள் அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் ஆம்புலன்ஸ் வைத்து திராவிட முன்னேற்ற கழகம் ஆளுகின்ற அரசு அரசியல் செய்ய ஆரம்பித்தால் உண்மையிலேயே ஆம்புலன்ஸில் நோயாளிகள் செல்லும் பொழுது என்ன நிலை ஏற்படும் இதனை வைத்து திமுக அரசு அரசியல் செய்ய வேண்டாம் என்று காட்டமாக திமுக அரசை விமர்சனம் செய்தார் ஏனென்றால் அது ஒரு உயிர் காக்கும் வாகனம்
தமிழகத்தில் மக்களைப் பற்றி சிந்தனை இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்து வருகின்றனர்
இன்று உதயநிதி பேசுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் நிறைய நாள் வாழ வேண்டும் என்று கூறுகிறார் உங்களை நம்பி ஆட்சி செய்யுங்கள் கவர்னர் இருந்தால் வெற்றி பெறுவோம், அண்ணாமலை இருந்தால் வெற்றி பெறுவோம், நீங்கள் இருந்தால் வெற்றி பெறுவீர்களா என்று கேள்வி எழுப்பினார்
திருமாவளவன் சொல்கிறார் வேங்கவையில் சொல்கிறார் நியாயம் கிடைக்க மறுக்கிறது என்று தெரிவிக்கிறார்
தொழிலாளர்களுக்காக போராடுகின்றோம் என்று சொல்லிக் கொள்கின்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கூட ஆதரவு தெரிவிக்க மறுக்கிறார்கள்
காங்கிரசை பற்றி சொல்லவே வேண்டாம்
மக்களுக்கான எதிர்ப்பு கூட்டணி என்றால் அது திமுக கூட்டணி தான் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் செய்தார்
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பது எங்கள் நம்பிக்கை
தமிழகத்தில் நடைபெற்றது 3000 கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் நடைபெற்று உள்ளது என்று கூறும் திமுக அரசு தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை
இந்து மத விழாக்களுக்கு திமுக அரசு வாழ்த்து சொல்ல வேண்டும்
இந்து மதங்களை விமர்சிப்பதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்
தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் பெறப்படும் அணுக்கள் எல்லாம் மீன்களுடன் ஸ்டாலின் என்பது போல் தண்ணீரில் மனுக்கள் மிதந்து கொண்டிருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார்
மக்கள் பிரச்சனைக்கு வாங்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் பிரச்சனை தெரியாமல் அப்படியேதான் இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்






