ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் கடந்த 5- ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை கட்சி தலைமைக்கு தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அதிமுக தலைமை கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொது வெளியில் வெளிபடுத்தியதாக கூறி கட்சித்தலைமை செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து அறிவித்தது.
இந்த நிலையில் செங்கோட்டையனின் கருத்துக்கு அதிமுகவில் இருந்து நீக்கபட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து அதிமுகவினர் நாள் தோறும் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் இல்லத்திற்கு நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இன்று கோபிச்செட்டிப்பாளையத்தில் நண்பரின் குடும்ப விழாவிற்கு சென்ற செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
அப்போது எல்லோரும் நினைப்பது போல நல்லதே நினைத்து நல்லதையே செய்வோம் எனவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர இன்னும் நேரம் இருக்கிறது என செங்கோட்டையன் தெரிவித்தார்






