புரட்சி பாரதம் கட்சி தலைவராக பொறுப்பேற்று 23 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து கட்சி சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் கேக் வெட்டி கொண்டாடினார்.இந்த நிகழ்ச்சியின் போது வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி. வி.ரமணா சால்வை அணிவித்து வாத்துக்களை தெரிவித்துக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை மூர்த்தி எம்எல்ஏ,கொரோனா காலத்திலும், புயல் மழை காலத்திலும் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் என திமுக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை விட 7 ஆயிரம் குறைவாக கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் தான்தோன்றித்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.அதேபோல் அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நான்கரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவேன் எனவும் உறுதியளித்திருந்தார் அதையும் நிறைவேற்றவில்லை.எதிர்க்கட்சியாக இருக்கின்ற போது சொல்வதை எல்லாம் ஏன் தற்போது செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடு செய்வதற்காக சென்று வந்த முதலமைச்சர் இதுவரை எவ்வளவு தொகை பெற்று வந்தார்.? எவ்வளவு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது?எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது போன்ற எந்த அறிக்கையும் அவர்கள் வழங்கவில்லை. இதையெல்லாம் அவர்கள் விளம்பரத்திற்காக மட்டுமே செய்கிறார்களே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.வருகிற டிசம்பர் மாதத்திற்குள் திமுக கூட்டணியில் இருந்து நான்கு கட்சிகள் வெளியேற தயாராக இருக்கின்றன.திமுக கூட்டணி இல்லாமல் தனியாகத்தான் நிற்கும். அதேபோல் அதிமுக கூட்டணிக்கு ஒரு சில கட்சிகள் வந்து சேரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. தமிழகத்தில் இந்த முறை மும்முனைப் போட்டிதான் நிலவும் எனவும் அவர் தெரிவித்தார்.ஒரு முறை ஆட்சியில் இருந்து மறுமுறை ஆட்சிக்கு வருவது என்பது அதிமுகவுக்கு மட்டுமே சாத்தியமானது என்றும் அது மற்ற கட்சிகளுக்கு சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்தார். புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடித்து வருவதாகவும் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கியது குறித்த கேள்விக்கு அரசியலில் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள பக்குவம் வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் இது போன்ற அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்
திமுக கூட்டணியில் இருந்து சில கட்சியில் வெளியேறும்-புரட்சிப் பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி கணிப்பு
