Home / நிகழ்வுகள் / பெரியார் பல்கலை கழகத்தில் மரக்கன்று நடும்விழா.

பெரியார் பல்கலை கழகத்தில் மரக்கன்று நடும்விழா.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது மாவட்ட வன அலுவலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பெரியார் பல்கலைக்கழத்தில் கலைஞர் ஆய்வு அரங்கம் அருகில் “பெரியார் பசுமை வனம்”என்ற தலைப்பில் 4.5 ஏக்கர் பரப்பளவில் 500 மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது; சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி கலந்து கொண்டு மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

சேலம், பெரியார் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசின் வனத்துறையும் இணைந்து பல்கலை கழகத்தில் உள்ள கலைஞர் ஆய்வு மையம் அருகில் 4.5 ஏக்கர் பரப்பளவில் 500 மரக்கன்றுகளை நட்டுப் ‘பெரியார் பசுமை வனம்’ உருவாக்கும் முயற்சியின் தொடக்க நிகழ்ச்சி பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்
துணைவேந்தர் நிருவாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் சுப்பிரமணி மற்றும் சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பல்கலைக்கழக துணைவேந்தர் நிர்வாக குழு உறுப்பினர் பேராசிரியர் சுப்பிரமணி பேசும்போது,

இந்திய அளவில் காடுகளை வளர்த்தல் 33 விழுக்காட்டுடன் கூடிய இலங்கைக் கொண்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள 95 ஏக்கர் நிலப்பரப்பில் 22 விழுக்காட்டு நிலப்பரப்பு மரங்களால் நிரம்பியுள்ளது. தற்போது ‘பெரியார் பசுமை வனம்’ 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் 500 மரக்கன்றுகளால் அமையவுள்ளது. இதனால் 26 விழுக்காடாக பல்கலைக்கழகத்தின் காடு வளர்ப்பு உயரவுள்ளது. மாணவர்கள் தாங்கள் நட்டுவைத்த மரங்களை நாள்தோறும் பராமரிக்க வேண்டும். மரங்களை வளர்ப்பதில் மாணவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின் பல்கலைக்கழக நிர்வாகம் அதை உடனடியாக நிறைவேற்றித் தரும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங்க் ரவி பேசும்போது,

“மரங்களை நடுதல் என்பது காடுகளை வளர்ப்பதோடு பல்லுயிர் பெருக்கத்திற்கும் அவசியமாகிறது. மாணவர்கள் படித்து முடித்த பிறகும் தாங்கள் நட்டுவைத்த மரங்களைக் கடந்துசெல்லும் போது ஒரு பெரும் உள்ளுணர்ச்சியைப் பெறமுடியும். காலநிலை மாற்றத்தைத் தடுக்கவும் காடு வளர்ப்பு அவசியமாகிறது.” என்றார்.

இந்நிகழ்வில் துணைவேந்தர் நிருவாகக் குழு உறுப்பினர் ஜெயந்தி, வளாகப் பராமரிப்புப் பிரிவின் இணை இயக்குநர் அருள்பாலச்சந்திரன் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த துறைத்தலைவர்கள். பேராசிரியர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *