சேலம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவி குழு மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சேலம் ஈரோடு கோயம்புத்தூர் வேலூர் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர், விவசாயிகள், வங்கி மேலாளர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்,இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் தனராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் பெற்று பயனடைந்த மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது பின்னர் 201 கோடி மதிப்பிலான கடனுதவியை 1805 மகளிர் சுய உதவி குழுவினருக்கு இந்திய ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குனர் தனராஜ் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஓவர்சீஸ் வங்கியில் நிர்வாக இயக்குனர் தனராஜ் பேசும்போது,
90 ஆண்டுகளாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளது, இந்தியாவில் உள்ள வங்கிகளில் மூன்றில் ஒரு பங்கு வங்கிகள் தமிழகத்தில் உள்ளது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தமிழக அளவில் 38 மாவட்டத்தில் 15 மாவட்டங்களில் முன்னோடி வங்கியாக செயல்பட்டு வருகிறோம், 25 ஆயிரம் ரூபாய் மகளிர் சுய உதவி குழு கடனில் ஆரம்பித்தது,தற்போது 20 லட்சம் ரூபாய் வரை மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கும் அளவிற்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது, வங்கியில் சென்று மகளிர் சுய உதவி குழுவினர் கடன் வாங்கிய நிலை மாறி தற்போது மகளிர் சுய உதவிக் குழுவினர் இருக்கும் இடத்தை தேடி சென்று வங்கிக் கடன் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, கடந்த இரண்டு ஆண்டுகளில் 1240 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளோம்,இந்த ஆண்டு தற்போது வரை ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் கொடுத்து வருகிறோம்,உழவர் உழைப்பாளர் நிறுவனம் ஆரம்பித்து விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மத்திய மாநில அரசுகள் உருவாக்கியது.இந்த அமைப்பின் மூலம் பயிற்சி பெற்று தொழில் முதலீடு செய்வதன் மூலமாக வருமானத்தை ஈட்டி வங்கி கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம், மகளிர் சுய உதவி குழு கடன், விவசாய கடன், சிறு குறு தொழில் கடன் ஆகியவற்றை கொடுப்பதற்கு தயாராக உள்ளோம், பெண்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீ சக்தி யோஜனா என்ற திட்டம் மூலம் கழிப்பிட வசதி,குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்கு சிறப்பு கடன் வசதி உள்ளது மகிளா ஷக்ஷம் திட்டத்தின் மூலம் பெண்கள் 20 லட்ச ரூபாய் வரை வங்கி கடன் பெற்று தொழில் செய்து பயன் அடையலாம், ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகள், மாணவர்கள், மகளிர், முதியோர் ஆகிய அனைவருக்கும் வங்கி கணக்கு இன்றியமையாததாக உள்ளது எனவே அனைவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கை துவங்கிக் கொள்ளுங்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயலி மூலம் எளிதாக வங்கி சேவையை பெறலாம், வாட்ஸ் அப் மூலமாகவும் பணப்பரிவர்தனை செய்து கொள்ள முடியும், அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் மத்திய அரசு திட்டங்கள் சேர வேண்டும் என்பதற்காக சிறப்பு முகாம் நடத்தி வருகிறோம் அதனையும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் மகளிர் சுய உதவி குழுவினர் தொடர்ந்து திறம்பட செயல்படுவதால் வங்கியாளர்கள் மகளிர் சுய உதவி குழுவினரை தேடிச்சென்று கடன் வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் மத்திய அரசின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 600 கோடி ரூபாய்க்கு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது வாங்கிய கடனை மிகச் சரியாக பயன்படுத்தி திரும்ப செலுத்தி வரும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு அவர்களுடைய வீட்டில் கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த சக்தி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மகளிரை லட்சாதிபதியாக்குவோம் (mahila saksham) என்கிற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நடப்பாண்டு தமிழ்நாடு முழுவதும் 23 ஆயிரம் மகளிருக்கு கடன் வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் 75 ஆயிரம் முதல் 10 லட்ச ரூபாய் வரை எவ்வித பிணையும் இன்றி மகளிர் சுய உதவி குழுவினர் கடன் பெற்று தொழில் முனைவோரக மாறிட முடியும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் தனராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேலம் முதன்மை மண்டல மேலாளர் விக்ரம் சேத், கோயம்புத்தூர் மண்டல மேலாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி, கோயம்புத்தூர், சேலம் ஈரோடு மற்றும் வேலூர் மண்டலத்தை சேர்ந்த 10 ஆயிரம் பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.