நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசி (24) இவர் கடந்த சனிக்கிழமை அன்று நாமக்கலில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றிய போது கலந்து கொண்டார் அப்போது எழிலரசி திடீரென மயங்கி விழுந்தார் உடல்நிலை பாதிக்கபட்ட அவரை உடனடியாக மீட்டு சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது படிப்படியாக குணமாகி வருகிறார் இதனை அறிந்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று மாலை நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனைக்கு வந்து எழிலரசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பின்னர் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிவேந்தன் கூறும் போது நாமக்கலில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் எழிலரசி அவர்களுக்கு வலிப்பு வந்து உள்ளது உடனடியாக அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே அவருக்கு ரத்த சோகை இருந்ததால் உடல்நிலை மோசமானது தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது நாளை சாதாரண வார்டுக்கு மாற்றுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் பின்னர் அவர் டிச்சார்ஜ் செய்யப்படுவார் காலையில் சாப்பிடாமல் கூட்டத்திற்கு சென்றதால் வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் செய்து தருவோம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் நாமக்கல் மருத்துவக் கல்லூரியில் ஒருவரும் ஈரோடு மருத்துவமனையில் ஒருவரும் கோவை கேஎம்சியில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் எல்லோரும் ஓரளவிற்கு குணமாகி வருகின்றனர் என்று கூறினா






