Home / அரசியல் / கரூரில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு; சேலத்தில் சுகவனேஸ்வரர் கோவிலில் பாஜகவினர் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

கரூரில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு; சேலத்தில் சுகவனேஸ்வரர் கோவிலில் பாஜகவினர் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் பல்வேறு அரசியலுக்கு கட்சி தலைவர்களும், இயக்கங்களும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் பாஜகவினர் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் தலைமையில் சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் சிலை முன்பு மோட்ச தீபம் ஏற்றி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து உயிரிழந்தவர்களின் ஆன்மா மோட்சம் அடைய அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *