Home / உள்ளூர் செய்திகள் / செஞ்சி அருகே பழுதடைந்த ஆதிதிராவிடர் பள்ளி; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

செஞ்சி அருகே பழுதடைந்த ஆதிதிராவிடர் பள்ளி; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசின் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் கட்டிடம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் குறிப்பாக வகுப்பறையில் உள்ள இரும்பு ஜன்னல் உள்ள பகுதியில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து காணப்படுவதால் இரும்பு ஜன்னல் எந்நேரமும் கீழே விழுந்து பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது.

மேலும் தரை பகுதியில் சிமெண்ட் பூச்சு உடைந்து ஆங்காங்கே பள்ளம் பள்ளமாக காணப்படுவதால் மாணவர்கள் அடிக்கடி காலில் இடித்துக்கொண்டு சிறு காயங்கள் ஏற்படுவதாகவும், மழைக்காலங்களில் இந்த தரையால் மாணவர்களுக்கு குளிர் காய்ச்சல் ஏற்படுவதாகவும் அக்கிராம பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

எனவே இந்த அரசினர் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அசாம்பாவிதம் ஏற்படும் முன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளி வகுப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tagged: