Home / குற்றம் / சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை 65 ஆயிரம் பணம் கொள்ளை-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை 65 ஆயிரம் பணம் கொள்ளை-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு

சேலம் குரங்கு சாவடி அருகே உள்ள நரசோதிப்பட்டி என் கே என் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (58) இவர் சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலா தேவி (52) நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்துறை துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமார் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தொழில்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டு இரவு கிருஷ்ணகிரியிலேயே தங்கியுள்ளார். இதனால் மணிமேகலாதேவி நாமக்கல்லில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கிவிட்டார். மறுநாள் காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனை அடுத்து சூரமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை செய்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர் பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் தொழில்துறை இணை இயக்குனர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *