சேலம் வாழப்பாடி அருகே உள்ள பெலாப்பாடி மலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர் அந்த மனுவில் ஆலடிப்பட்டி ஊராட்சியில் உள்ள வாழூத்து, தாளூர், பெலாப்பட்டி ஆகிய ஊர்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் 1500 க்கும் மேற்பட்டோர் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம் ஆனால் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி இல்லை, எங்கள் ஊருக்கு மினி பேருந்து வசதி செய்து தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம், ஆத்தூர் கோட்டாட்சியரிடமும் பலமுறை மனு கொடுத்துள்ளோம் ஆனால் இதுவரை பேருந்து வசதி ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை பெலாப்பாடியில் இருந்து புழுதி குட்டை வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறி செல்லும் அவல நிலை உள்ளது இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், கர்ப்பிணி பெண்கள், வயது முதிர்ந்தோர், உடல்நிலை சரியில்லாதவர்கள் சுமார் ஏழு கிலோமீட்டர் நடந்து சென்று சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவே எங்கள் ஊருக்கு மினி பஸ் வசதி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது பல தலைமுறைகளாக பெலாப்பாடி மலை கிராமத்தில் வசித்து வருகிறோம் இதுவரையில் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி இல்லை இப்போதுதான் தார் சாலை வசதியும் மின் வசதியும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் பேருந்து வசதி இல்லாததால் விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், பள்ளி கல்லூரி மாணவர்கள் கர்ப்பிணி பெண்கள் உடல் நலிவுற்றோர் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறோம், ஆலடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்களை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் ஒரு முறை மட்டுமே வந்து செல்கிறது எனவே எங்களது பகுதிக்கு மினி பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.