சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (54) இவர் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார் இந்த மருத்துவமனையில் உள்ள அதிநவீன அல்ட்ரா ஸ்கேன் பிரிவில் மருத்துவர்கள் சிலர் கருவுற்ற பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா?, பெண்ணா? என பார்த்து கூறுவதாக சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனருக்கு புகார் வந்தது.இதனையடுத்து இன்று பிற்பகலில் சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் நந்தினி தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று அரசு மருத்துவமனைக்கு வந்து கண்காணித்தனர் . அப்போது சேலம் அரசு மருத்துவமனை ரேடியாலஜிஸ்ட் மருத்துவர் தியாகராஜன் என்பவர் பெண் ஒருவருக்கு குழந்தை ஆணா? பெண்ணா? என பார்த்து கூறியுள்ளார் .
அப்போது அங்கு வந்த மருத்துவ குழுவினர் மருத்துவர் தியாகராஜன் மற்றும் புரோக்கர் ஸ்ரீ ராம் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்
பின்னர் மருத்துவர் தியாகராஜன் மற்றும் புரோக்கர் ஸ்ரீராம் ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சேலம் அரசு மருத்துவமனை டாக்டர் தியாகராஜன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் காந்தி ரோடு பகுதியில் மருத்துவர் தியாகராஜன் குளோபல் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்துள்ளார் அந்த சென்டரில் ஸ்ரீராம் மேலாளராக வேலை பார்த்து வந்தபோது கருவுற்ற பெண்களிடம் பாலினம் குறித்து தெரிவிக்க பணத்தைப் பெற்றுக் கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் தியாகராஜனிடம் அனுப்பி வைத்து ஸ்கேன் செய்து கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிவிப்பதும் இதற்கு 18,000 முதல் 12 ஆயிரம் வரை பணம் பெற்று பரிமாறிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது இதனை அடுத்து இவர்கள் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மருத்துவமனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்






