Home / நிகழ்வுகள் / சேலத்தில் நலிந்து வரும் கிராமிய கலைகளை மேம்படுத்த கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 2000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு

சேலத்தில் நலிந்து வரும் கிராமிய கலைகளை மேம்படுத்த கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 2000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு

சேலம் மாவட்ட கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பொதுமக்கள் மற்றும் கலைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை விழிப்புணர்வு பேரணியை இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணியில் கலை அமைப்புகளான தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம், நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம், நாதஸ்வரம் தவில் இசைக்கலைஞர்கள் சங்கம். தமிழ்ச்சங்கம், தெருக்கூத்து கலைஞர்கள், பறை இசை கலைஞர், ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தெருக்கூத்து, பம்பை, சிலம்பம், கோல்கால் ஆட்டக் கலைஞர்கள் ஆகியோர் இணைந்து ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காலையிலேயே வருகை தந்த கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து அரிதாரம் பூசி தங்களை தயார் படுத்திக் கொண்டனர். பறை இசைக் கலைஞர்கள் தங்களின் இசைக்கருவிகளை தீயில் வாட்டி தயார்படுத்தினர். சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி நாமக்கல் ,ஈரோடு, ஊத்தங்கரை அரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்றனர்.

இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு திருவள்ளுவர் சிலை, வழியாகச் சென்று, கடைவீதி இராஜகணபதி கோயிலில் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு செய்யப்பட்டது.
இந்தப் பேரணி துவங்கியது முதலில் இருந்தே தெருக்கூத்து நிகழ்ச்சிகள் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை சாலைகளில் நடத்தியவாரே பேரணியில் பங்கேற்றனர். மேலும் மேளதாளங்கள் முழங்க நாதஸ்வரம் வாசித்தவாறு சாலையில் செல்லும் பொதுமக்கள் கிராமிய நிகழ்ச்சியில் கண்டு வியந்து கண்டு களித்தனர். இந்த பேரணியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் தத்ரூபமாக நடித்துக் கொண்டு கலைஞர்கள் சென்றது சாலையில் செல்லும் பொதுமக்கள் ரசிக்கும் வண்ணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது

இப்பேரணியின் மூலம் கலை பண்பாட்டுத்துறையின் செயல்பாடுகள். திட்டங்கள் மற்றும் அரசின் சிறப்பு திட்டங்கள் பொதுமக்களுக்கும் கலைஞர்களுக்கும் அறிந்து கொள்ள ஏதுவாக கலைப் பண்பாட்டு துறை மாணவர்கள் நாடக கலைஞர்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் சங்கரராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *