Home / உள்ளூர் செய்திகள் / சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி; காவல்துறை தடுத்து மீட்டது

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு குடும்பங்கள் தீக்குளிக்க முயற்சி; காவல்துறை தடுத்து மீட்டது

சேலம் மேட்டூர் அருகே உள்ள தண்ணீர்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த செவ்வந்தி என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வீட்டின் அருகே உள்ள தரிசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பெரியண்ணன் என்பவரிடம் கேட்டதற்கு, தனது குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டார். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். அப்போது தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி மீட்டனர்.

இதைத்தொடர்ந்து சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் தனது குடும்பத்துடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக வாழப்பாடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் தொழில் மேற்கொள்வதற்காக 55 லட்சம் கடனுக்கு 2 கோடிக்கு மேல் பணமும், நிலமும், பெற்றுக்கொண்டு,மேலும் 75 லட்சம் பணத்தை கட்டவேண்டும் என்று மிரட்டுவதாக வங்கி மேலாளர் மீது புகார் தெரிவித்தார். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றவர்களை மீட்டு சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *