சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரெட் பிளவர் திரைப்பட குழுவினர் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இந்த ரெட் பிளவர் திரைப்படத்தை சந்திரமுகி, இந்தியன் 2, எந்திரன் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்த ஆண்ட்ரூ பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார் கதாநாயகியாக கன்னடம் மற்றும் ஹிந்தியில் நடித்து வரும் மனிஷா ஹிராயினி என்பவர் நடித்துள்ளார் மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 90 காலகட்டத்தில் பிரபல நடிகராக விளங்கிய கிழக்குச் சீமையிலே, பசும்பொன், சின்னத்தாயி உள்ளிட்ட 57 திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்னேஷ் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது மேலும் பாடல் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விக்னேஷ் பேசும்போது,
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வருகிறேன் 90களில் காலகட்டத்தில் நிறைய வெற்றி படங்களை கொடுத்துள்ளேன் சில காரணங்களால் என்னுடைய சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு சென்று தொழில் செய்து வந்தேன் இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் மாணிக்கம் என்பவர் புது படம் எடுக்க முடிவு செய்து என்னிடம் வந்தார். இதில் இந்திய ராணுவம், மூன்றாம் உலகப் போர் தொடர்பான கற்பனை கதையை தேர்வு செய்து அதை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என கூறினார், கதையை என்னிடம் கூறிய போது கேட்டு வியந்து போன நான் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன். அப்போது தயாரிப்பாளர் மாணிக்கம் இந்த கதை நடிகர் விஜய் நடிப்பதற்காக தயார் செய்து வைத்திருந்தேன் ஆனால் அவர் அரசியலுக்கு சென்று விட்டதால் உங்களை வைத்து எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார், 2047 ஆம் ஆண்டு நடக்கப் போகும் போர் சம்பவத்தை கற்பனையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த முடிந்த ஆபரேஷன் சிந்து போன்று இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் எடுத்துள்ள இத்திரைப்படம் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆகிய பகுதிகளில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி 400 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம், இதற்கு முன்பாக கிராமிய கதைகளில் நடித்து வந்த நான் இந்த கதையில் நடிக்க முடியுமா என யோசித்து அதற்கு ஏற்றபடி உடற்பயிற்சி செய்து என்னை மாற்றிக் கொண்டேன் முன்பு உடல் எடை 99 கிலோ இருந்தேன் தற்போது 66 கிலோவாக குறைத்துள்ளேன், திரைத் துறையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள எனக்கு ரஜினி கமல் சூர்யா விஜய் போல ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டுகோள் வைக்கிறேன், ரெட் பிளவர் திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள், இந்தப் படத்தின் டிரைலரை இதுவரை 25 லட்சம் பேர் பார்த்து உள்ளனர் நிச்சயம் இத்திரைப்படம் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து இத்திரைப்படம் எவ்வளவு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு இந்தத் திரைப்படம் 9 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகிறது அனைவரும் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் மாணிக்கம் கூறினார்.