Home / அரசியல் / இருதரப்பினர் மோதலால் பரபரப்பான திண்டிவனம்! வன்னியர் சங்க அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்

இருதரப்பினர் மோதலால் பரபரப்பான திண்டிவனம்! வன்னியர் சங்க அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்

பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில் . நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாசை செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் பல்வேறு பகுதிகளில் இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி வந்த நிலையில் இன்று திண்டிவனம் மயிலம் சாலையில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளரான மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் பூட்டு போட்டதாக கூறி, அன்புமணி ஆதரவாளர்கள் ராஜேஷ் உள்ளிட்டோர் வன்னியர் சங்க அலுவலகத்தில் இரு தரப்பினரும் திரண்டு தகாத வார்த்தைகளால் பேசி மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின்னர் இரு தரப்பினரும் திண்டிவனம் காவல் நிலையத்தில் திரண்டு ஒருவருக்கொருவர் மீண்டும் தனாக வார்தைகளால் பேசிக் கொண்டதால், திண்டிவனம் காவல் நிலையம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. பின்னர் போலீசார் சமாதானம் செய்து இரு தரப்பினரிடம் புகார் மனு பெற்று விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *