நெல்லை பாளையங்கோட்டையில் ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தாகாரத்,மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தாகாரத் பேசுகையில்
சமுகத்தில் ஏற்றத்தாழ்வு சமநிலை அல்லாத நிலையை பாஜக உருவாக்கி வருகிறது. சாதிய ஒடுக்குமுறை சாதிய கெளரவம் என்ற பெயரில் எண்ணிபார்க்க முடியாத அளவில் குற்றங்கள் நடக்கிறது. தேசிய ஆவண காப்பகத்தில் சாதிய கெளரவத்தால் நடக்கும் குற்றங்கள் தொடர்பான எந்த எண்ணிக்கையும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மார்க்சிஸ்ட் கட்சி தான் சாதிய குற்றங்களுக்கு தனிசட்டம் வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதன்முதலில் குரல் கொடுத்தது.மார்க்சிஸ்ட் கட்சியின் தோழளர்கள் சாதிய கொடுமைக்கான சட்ட வரைவு அறிக்கையை தயார் செய்து சட்ட ஆணையத்திலும் தாக்கல் செய்தனர். சாதி அமைப்புகளால் நடத்த கூடிய கட்டபஞ்சாயத்துகள் அனைத்து தனி மனித குற்றங்கள் அல்ல.,அது சமூகம் சார்ந்தது.அது ஒரு சமூக குற்றமாக தான் நடக்கிறதே தவிர அது தனி மனித குற்றமாக நடக்கவில்லை. இதுபோன்ற சாதி கவுரத்தின் அடிப்படையில் தனிசட்டம் வேண்டும் என்று தான் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி வரைவு தயாரித்து கொடுத்தது அதன் பின் ஆட்சி அமைத்த பாஜக அந்த சட்ட வரைவை கிடப்பில் போட்டுவிட்டது. கடந்த 11 ஆண்டுகளில் பாஜக ஆளும் 9 மாநிலங்களில் லவ் ஜிகாத் என்ற மோசமான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாற்று சமூகத்தை சார்ந்தவர்கள் காதலித்தால் அது குற்றம் என வரையறை செய்யப்பட்டு மோசமான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்து முஸ்லீம் ஆகியோர் காதிலித்து திருமணம் செய்வதை தடுக்க லவ் ஜிகாத் என்ற சட்டத்தை பாஜக கொண்டுவந்தது. தலித் சமுகத்தை சேர்ந்தவர் மாற்று சமுகத்தை சேர்ந்தவர்களை காதலித்தால் அதனை தடுக்க சட்டத்தை தேசிய அளவில் ஏன் பாஜக கொண்டுவரவில்லை. சாதிய கட்டமைப்பு , சாதிய கொடுமைகள் தொடர வேண்டும் என பாஜக நினைக்கிறது. அதன் காரணமாகவே சாதிய பிரச்சனைகள் குறித்து பாஜக பேச முன்வரவில்லை. சாதிய கட்டமைப்புகள் தொடர வேண்டும் என்ற அடிப்படையிலேயே பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏன் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரிக்க சட்டத்தை கொண்டுவர பாஜக மறுக்கிறது. தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி அலுவலகம் திறந்தே இருக்கும் என்ற துணிவு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சிக்கு மட்டும் தான் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இரட்டை நிலைப்பாட்டை கைவிட வேண்டும். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ள சாதி மறுப்பு திருமணத்திற்கான ஆதரவு திட்டத்தை கையில் எடுக்க வேண்டும் அம்பேத்கர் பெரியார் கண்ட கணவின் நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செய்தது காட்டியுள்ளது. நாடு தழுவிய அளவில் சாதிய கொடுமைக்கு எதிராக தனிச்சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.தமிழக அரசு சாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு தோலோடு தோல் நின்று தமிழகத்தில் சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை உருவாக்கி நாடிற்கே முன்னோடியாக திகழவேண்டும் என தமிழக அரசிற்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பேசுகையில்
எங்கள் போராட்டம் குறிப்பிட்ட சாதிகளுக்கு எதிரானது அல்ல. சாதியற்ற சமூகம் வேண்டும் என்பதே எங்களின் இலக்கு ஆணவக் கொலைகளைத் தடுக்கும் தனிச் சட்டத்திற்கான அவசியம் குறித்து 2009 ஆம் ஆண்டிலேயே அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய நாடாளுமன்றத்தில் முதன்முதலாக முன்மொழிந்து பேசியுள்ளார். வயது வந்த ஆண், பெண் இணையைத் தேர்வு செய்யும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ளது. இதில் பெற்றோருக்குக் கூடத் தலையிடும் உரிமை இல்லை. காதல் திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு பாதுகாப்பையும், ஆதரவையும் வழங்கும். தைரியமாகக் காதலியுங்கள், எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். திருமணத்தை செய்து வைப்பதற்கும், திருமணத்திற்குப் பிறகும் உங்களைப் பாதுகாப்பதற்கும் எங்கள் கட்சித் தோழர்கள் தயாராக உள்ளனர். நாங்குநேரியில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நிதிபதி சந்துரு தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து அந்த ஆணையம் வழங்கியுள்ள பரிந்துறைகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் அமல் படுத்தியுள்ளது, இதனை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது . வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான தனிச் சட்டத்தை தமிழக அரசு தாமதமின்றி இயற்ற வேண்டும் . மாணவர்கள் மத்தியில் சமத்துவ உணர்வை வளர்ப்பதற்கும், சாதியப் பாகுபாடுகளை எதிர்ப்பதற்கும் அனைவரும் முன்வர வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர் கற்பகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.






