திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தை திறந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவராக பதவி ஏற்க உள்ள மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் எனவும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு, தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, தமிழக மக்களும் நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும், இந்திய அரசியல் வரலாற்றில் 1947க்கு பிறகு அமல்படுத்திய வரியை குறைத்தது பிரதமர் மோடி அரசு தான் என்றும், 3 பிரிவுகளாக இருந்த வரியை 2 பிரிவுகளாக மாற்றி, 10% வரி குறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்
