Home / தமிழ்நாடு / திருநெல்வேலி / ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பேச்சு

ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பேச்சு

சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி நெல்லை பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் சாதிய கொலைகளை தடுக்க வேண்டும் சாதி மாறி காதலிக்கும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு பெற்ற சூழல் தற்போது நிலை வருகிறது. சாதிய மறுப்பு திருமணங்களை கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் நடத்திக் கொள்ளலாம் என அறிவித்த பின்னர் சாதி மறுப்பு திருமணம் மேற்கொள்ளும் இளைஞர்களிடமிருந்து அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது எதிராக சட்டம் வேண்டும் என சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வைத்த கோரிக்கையை தமிழக முதலமைச்சர் ஏற்க மறுத்துவிட்டார் இப்போது இருக்கும் சட்டமே போதுமானது என முதல்வர் தெரிவித்தார் ஆனால் அதன் பின்னரும் சாதிய ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது அதனை தடுக்க தமிழக அரசால் முடியவில்லை தமிழகத்தில் பல ஊராட்சி குழு தலைவர்களால் தேசிய கொடி ஏற்ற முடியவில்லை. அவர்களது இருக்கையில் அமர்ந்து அமர்ந்து கூட்டம் நடத்த முடியவில்லை. தமிழகத்தில் இன்றும் தீண்டாமைகள் தொடர்ந்து வருகிறது. வன்கொடுமைக்கு எதிராக சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் தான் வாச்சாத்தி பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்தது போக்சோ சட்டம் கொண்டு வந்ததால்தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற பல சிறப்பு சட்டங்களால் தான் அந்த பிரச்சனைகள் தடுக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் தண்டனைகளும் கிடைக்கப் பட்டு வருகிறது ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் கொண்டு வர வேண்டும் என சொல்லவில்லை தேசிய சட்ட ஆணையம் தேசிய மகளிர் ஆணையம் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் என அனைத்து அமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது ஆனால் இதுவரை சட்டம் கொண்டுவர அரசுகள் முன் வரவில்லை தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வர அனைத்து உரிமையும் உள்ளது தமிழக அரசு சட்டக் கொண்டு வந்தால் ஆளுநர் அதனை தடுக்க வாய்ப்பு உள்ளது ஏனென்றால் அவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பின்பற்றக் கூடியவர் வரும் கூட்டத் தொடரிலேயே ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து நெருக்கடி கொடுப்பதாக அனைவரும் பேசுகிறார்கள் இந்த ஆட்சியில் இதுபோன்ற சட்டத்தை கொண்டுவர முடியவில்லை என்றால் இனி கொண்டுவரவே முடியாது இந்த சட்டம் கொண்டுவர வலியுறுத்துவது நியாயமான கோரிக்கை தான் சாதி மறுப்பு திருமணத்திற்கு பாதுகாப்பு சாதிய ஆணவ படுகொலையை செய்பவருக்கு கடுமையான தண்டனை போன்றவைகளை செய்ய வேண்டியது அரசின் கடமை சாதிய ஆணவ படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் வரும் கூட்டத்தொடரிலேயே கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் சாதிய வெறியர்களின் கருத்தாக்கங்களுக்கு இளைஞர் சமுதாயம் பலியாகி விடக்கூடாது நெல்லை மாவட்டத்தில் கொலை குற்ற சம்பவத்தில் மட்டும் ஈடுபட்டு 67 சிறார் குற்றவாளிகள் சிறையில் உள்ளனர் இது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது பள்ளிகளில் ஏற்படக்கூடிய சாதிய பாகுபாடுகளை தடுக்க நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அரசு நியமித்தது ஆணையமும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு பல நல்ல பரிந்துரைகளை வழங்கியது ஆனால் அதில் சில மட்டுமே அரசு நிறைவேற்றி உள்ளது சாதிய கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்தால் அவர்களை மாற்றிய இடங்களுக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குனரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது ஆசிரியர்களே சாதிய கண்ணோட்டத்துடன் பள்ளியில் இருந்தால் எதிர்கால தலைமுறை உருப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது மகிழ்முற்றம் அமைக்க வேண்டும் மாணவர்கள் தங்கள் மனதில் உள்ளதை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் அதனை பள்ளி மேலாண்மை குழுவும் தலைமை ஆசிரியரும் ஒன்றிணைந்து படித்து தீர்வு காண வேண்டும் என பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி பள்ளிக்கல்வித்துறையால் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது இந்த பள்ளிக் கல்வித் துறையின் சுற்றறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது இருந்தாலும் நீதிபதி சந்துரு அறிக்கையில் உள்ள அனைத்து பரிந்துரைகளையும் அரசு எந்தவித கால தாமதமும் இல்லாமல் நிறைவேற்ற முன்வர வேண்டும் அனைவரும் சமம் என்பதை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அனைவரும் முன்னெடுக்க வேண்டும் அமைதி இல்லாத மாநிலத்தால் எதுவும் நடக்காது அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைத்தால் தான் அனைவரும் முன்னேற முடியும் என தெரிவித்தார்

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *