தமிழகத்தில் தேசிய செட்டியார்கள் பேரவை எனும் அமைப்பை 15 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி மக்களுக்கான சமூகப் பணிகளை முன்னெடுத்து வந்த பி.எல்.ஏ.ஜெகன்நாத் மிஸ்ரா நமது மக்கள் முன்னேற்ற கழகம் எனும் தேசிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார், இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பி.எல்.ஏ.ஜெகன்நாத் மிஸ்ரா நமது மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் தொடக்க விழா செப்டம்பர் 26 ஆம் தேதி மதுரையில் நடைபெறுவதாக அறிவித்தார்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பி.எல்.ஏ.ஜெகன்நாத் மிஸ்ரா கூறுகையில் “பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதில் 96 சதவீத மக்கள் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர், அதன்படி நமது மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியினை தொடங்கி உள்ளோம், அனைத்து தரப்பு மக்களின் உரிமையை மீட்கும் விதமாக செயல்படுவோம், இளைஞர், பெண்கள், விவசாயிகள் என ஒட்டுமொத்த மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம், மக்களுக்கு தேவையானதை பெற்றுத் தர முன்நின்று போராடுவோம், எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களது கொள்கை தலைவர் கூறிய கொள்கைகளைப் பின்பற்றி அரசியல் செய்வதில்லை, சமூக அமைப்பாக செயல்பட்ட போது மக்களுக்காக நிறைய போராட்டங்களில் பங்கேற்று உள்ளோம், தற்போது அரசியல் கட்சியாக மாறி உள்ளதால் மக்கள் பிரச்சனைகளில் முன்நின்று போராடுவோம், சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எங்கள் கட்சி போராடும், ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம், நீர், நிலம், காற்று ஆகியவற்றே பாதுகாப்பதே எங்கள் கட்சியின் பிரதான கொள்கை, தமிழகத்தில் 5 புதிய அணைகள் மற்றும் துணை அணைகள் கட்ட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தை முடக்குவது எங்கள் கட்சியின் நோக்கமல்ல, 80 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கி எதை சாதித்தோம், பாராளுமன்றத்தை முடக்குவதை விட அதில் பங்கேற்று மத்திய அரசின் நிறை, குறைகளை விவாதிக்கலாம், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தை முடக்குவதால் மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை, தமிழகத்தில் எந்தவொரு கட்சியும் விவசாயிகளைப் பற்றி சிந்திக்கவில்லை, நாங்கள் விவசாயிகளில் விலை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க மத்திய மாநில அரசுகளை சந்தித்து பேசுவோம், டிசம்பர் மாதத்திற்குள் 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க திட்டமிட்டுள்ளோம், தமிழக கேரளா எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் 2000 ஆண்டுகளாக கோவில் புனரமைக்கப்படாமல் உள்ளது, கண்ணகி கோவிலை பொன்ரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி கண்ணகி பிறந்த ஊரான பூம்புகாரிலிருந்து கண்ணகி கோவில் வரை 17 நாட்கள் நீதி யாத்திரை நடத்த உள்ளோம், மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக கேரளா முதல்வர்கள் மற்றும் பிரதமரை சந்திக்க இருக்கிறோம், இந்திய குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், தமிழர் என்கிற முறையில் அனைவரும் பெருமை படக்கூடிய ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது, 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கிறோம்” என கூறினார்.