Home / தமிழ்நாடு / சேலம் / சேலம் அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சேலம் அரசு மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக தற்கொலை தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது ஆண்டுதோறும் உலக அளவில் சுமார் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் 1.70 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் தமிழ்நாட்டில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன, தற்கொலை என்பது உலகளாவிய பொது சுகாதார பிரச்சனை எனவே இதனை தடுக்கும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பழிச்சொல்லை குறைப்பது, மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவ துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை அரசு மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ, செவிலியர் மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தற்கொலை ஒரு தீர்வு அல்ல, வாழ்க்கையில் சிக்கல்களைப் பற்றி பேசுவது உதவி கேட்பது மனநல நிபுணர்களின் உதவி பெறுவது மிக முக்கியம், நாம் ஒவ்வொருவரும் தற்கொலை தடுப்பில் பங்கு பெறலாம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மருத்துவமனை வளாகம் முழுவதிலும் பேரணியாக சென்றனர். சேலம் அரசு மருத்துவமனை மருத்துவப் பிரிவு அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து சாலைகள் வழியாக மருத்துவமனை முதல்வர் அலுவலகம் அருகில் நிறைவடைந்தது இந்த பேரணியில் மனநல மருத்துவத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை மாணவ மாணவிகள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *