சேலத்தில் செல்போன் டவரால் ஒரே கிராமத்தில் நிறைய பெண்களுக்கு, கருசிதைவு, குழந்தையின்மை உள்ளிட்ட பாதிப்பால் அவதிப்படுவதாக, பெண்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்…
சேலம் மின்னாம்பள்ளி ரயில்வே கேட் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்தப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கிராம பெண்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். குறிப்பாக இந்தப் பகுதியில் செல்போன் டவர் ஏற்கனவே அமைந்திருக்கும் நிலையில் மீண்டும் ஒரு செல்போன் டவர் இருந்து இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு டவர் அமைக்கப்பட்டுள்ளது.கிராமத்தில் ஒருவருக்கு மட்டுமே புற்றுநோய் இருந்த நிலையில்,தற்போது அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.செல்போன் டவர் அமைக்கப்பட்டிருப்பதால் குழந்தை இல்லாமல் நிறைய பெண்கள் கருமுட்டை சிதைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையை வெளிப்படுத்தினர்.முறையான அனுமதி பெறாமல் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து புகார் அளித்தும் என்று நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினர். கிராமத்தில் நிறைய பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.