சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுதல்,கார் தள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள்; உலக சாதனை நிகழ்வாக வின்னர்ஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றது.
சேலம் வெள்ளக்கல்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் துரோணா மூன்றாம் கண் யோகா பஞ்சபூத குருகுலம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை, தனியார் மேல்நிலைப்பள்ளி இணைந்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் 10 கிலோமீட்டர் தூரம் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல்,1 அரை கிலோமீட்டர் தூரம் சொகுசு காரை கைகளால் தள்ளுதல், கண்களைக் கட்டிக் கொண்டு தட்டு எறிதல், ஒரு மணி நேரம் இடைவிடாமல் படித்தல், ஒரு மணி நேரம் இடைவிடாமல் எழுதுதல், கண்களைக் கட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாடுதல், 5 மீட்டர் தூரத்தில் உள்ள நிறங்களை சரியாக கூறுதல், கண்களைக் கட்டிக் கொண்டு உலக வரைபடத்தில் உள்ள நாடுகளின் பெயர்களை சரியாக காட்டுதல் உள்ளிட்ட 41 வகையான போட்டிகளில் 19 மாணவ மாணவிகள் பங்குபெற்று சிறப்பாக தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த உலக சாதனை நிகழ்வு வின்னர்ஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த போட்டிகளை கோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அர்த்தனாரி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஜி டி பி கிரானைட் தலைவர் முத்துராஜன், சசி கண் மருத்துவமனை டாக்டர் சசிகுமார், துரோணா மூன்றாம் கண் யோகா மைய நிறுவனர் அருள்முருகன் வின்னர்ஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவர் சசிகுமார் கூறும் போது,

கண்களை திறந்து கொண்டு நாம் செய்ய முடியாத சில சாகசங்களை குழந்தைகள் கண்களை கட்டிக்கொண்டு சிறப்பாக செய்கின்றனர் இந்த சாகசங்களை பார்க்கும் போது வியப்பாக உள்ளது, இது போன்ற பயிற்சியின் மூலம் ஐம்புலன்களும் வலிமை பெறும், கண்களைக் கட்டிக்கொண்டு தொடுதல், நுகர்தல் மூலமாக சரியான நிறங்களையும், பொருட்களையும் காணமுடிகிறது,மனதை ஒருநிலைப் படுத்துவதன் மூலமாக உடல் மற்றும் கண் பார்வை மேம்படுத்த உதவுகிறது, உடல் ஆரோக்கியத்துடனும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் உறுப்புகளை வலிமையாக்குகிறது, மூன்று வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் எளிதாக இந்த பயிற்சிகளை கற்றுக் கொள்ள முடியும், குழந்தைகள் வேகமாக படிப்பதற்கும் நினைவாற்றலில் சிறந்து விளங்குவதற்கும் இந்த பயிற்சி மிகவும் உறுதுணையாக உள்ளது என்று கூறினார்.