மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா; சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி திருவுருவ படம், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை உத்தரவுபடி முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கேவி தங்கபாலு அவர்களின் வழிகாட்டுதல்படி இன்று சேலத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சேலம் மாநகர் மாவட்ட தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முள்ளுவாடி கேட் பகுதியில் அமைந்துள்ள மாநகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் இதனைத் தொடர்ந்து மத்திய கூட்டுறவு வங்கி அலுவலக அருகே உள்ள முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் புலிக்குத்தி தெரு பகுதியில் உள்ள ஜில்லா காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, வர்த்தகப்பிரிவு மாவட்ட தலைவர் எம் டி சுப்பிரமணியம், மாநகரத் துணைத் தலைவர்கள் மொட்டையாண்டி, ஈஸ்வரி வரதராஜு, மாநகர பொது செயலாளர் ராஜ்குமார், சிவகுமார், சேவா தல பிரிவு மாநில துணைத்தலைவர் வெங்கட்ராஜ், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிசார் அஹமது, ராமன், மோகன், கந்தசாமி, மாநகர செயலாளர் சஞ்சய் காந்தி, ராஜதுரை, விஜய் ராஜ், ராஜ் ராஜ்பாலாஜி, சீனிவாசன், தேவ கிருஷ்ணராஜ், கண்ணன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரத்தினவேல் பாண்டியன், மகிலா காங்கிரஸ் தலைவி சுதா, எஸ்சி எஸ்டி பிரிவு மாநில பொது செயலாளர் தினகரன், நெசவாளர் பிரிவு அருணாச்சலம், ஐ என் டி யு சி மாநகர தலைவர் தாஜிம், கலைப்பிரிவு மாநிலத் துணைத் தலைவர் யுவராஜ், ஓமலூர் வட்டாரத் தலைவர் வெங்கடாசலம், சக்திவேல், ஸ்ரீதர், பழனிச்சாமி, எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாநகரத் தலைவர் நாகராஜ், சிறுபான்மை பிரிவு ஜாவித், மகிலா காங்கிரஸ் ரெஜினா தாஸ், டிவிஷன் தலைவர்கள் மோகன், மாரியப்பன், புவனேஸ்வரன், திருவேங்கடம், செல்வராஜ், இந்திரா காந்தி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.