சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள இலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (43) தறி தொழிலாளியான இவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வளர்த்து வந்த நாய் அப்பகுதியில் இருந்த பல்வேறு நபர்களை கடித்துள்ளது இதனால் தன்னுடைய நாயை அடிப்பதற்கு முயன்ற போது காலில் கடித்து விட்டது. இந்த நிலையில் நாய் கடிக்கு எந்த ஒரு தடுப்பூசியும் போடாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களாக அவரால் தண்ணீர் குடிக்க முடியாமல் நாய் போலவே பல்வேறு செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் இதைத்தொடர்ந்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொண்டதில் இவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சேலம் அருகே தறி தொழிலாளி நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜாக்கிரதை-உயிரை காவு வாங்கிய செல்லப்பிராணி
