Home / தமிழ்நாடு / விழுப்புரம் / தமிழக தேர்தல் நேரத்தில் மோடி வருகை சாதகம் – ராமதாஸ்

தமிழக தேர்தல் நேரத்தில் மோடி வருகை சாதகம் – ராமதாஸ்

modi-tn-visit-ramadoss

பாமகவின் வேரூம் வியர்வையும் தைலாபுரத்தில் மட்டுமே உள்ளதாகவும், கட்சியின் தலைமைக்கு கட்டுபடாமல் யார் யாத்திரை சென்றாலும் தொண்டர்களும் மக்களும் ஏற்க மாட்டார்கள்; தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை புரிவது நல்லது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகர்கள் தொடர்ந்து கைது செய்வது தொடர்கதையாகி இருந்து வருகிறது. இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்களின் வலை மீன்களை கொள்ளை அடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது, கடந்த ஒருமாதத்தில் மட்டும் இலங்கை கடற்படையில் 40 க்கும் மேற்பட்டமீன்வர்கள் கைது செய்யபட்டு விசைபடகுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளதால்
மத்திய அரசு மீனவர்களை மீட்டு மீனவ சமூதாயத்திற்கு பாதுகாப்பு அரனாக இருக்க வேண்டுமென வலியிறுத்தி உள்ளார். வேளான்மை துறை தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து வேளான் வளர்ச்சி குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வது முறையல்ல, உழவர் 2.0 என்ற திட்டத்தினை கொண்டுவந்ததோடு சரி திட்டம் செயல்படுத்தவில்லை விவசாயிகளுக்கும் வேளாண்மை உதவி அலுவலர்களுக்கு நேரடி தொடர்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக அமையும் என கூறியுள்ளார். சென்னையில் கன்னிமாரா தேசிய நூலகத்தின் சீரமைப்பு பணி குறித்து முன்னரே தெரிவித்திருக்க வேண்டும் இதனால் வாசகர்கள் அரசு தேர்விற்கு தயாராவது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருவதால் உரிய தீர்வினை கானும் படி தமிழக அரசுக்கு வலியுறுத்துவதாக கூறினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 2021 தேர்தல் அறிக்கையில் 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கபடும் என தெரிவித்ததை நிறைவேற்றி தர வேண்டும், கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு நாட்டின் முதுகெலும்பு நொறுங்கும் அளவிற்கு செய்யகூடாது அரசானைப்படி ஊராட்சி அனுமதி இல்லாமல் எந்த வர்த்தகத்தையும் மேற்கொள்ள முடியாது என அரசானை பிறப்பித்து அதில் 119 சேவை தொழில் பட்டியலிடபட்டுள்ளது இதனால் எழை பாழைகள் அன்றாட கூலிகள் தான் வேதனை படுவார்கள் என்றும் வர்த்தக உரிமம் பெற்றவர்கள் தொழில்வரியை பெறுவது தான் இந்த அரசானையின் நோக்கமாக இருக்கும் என்பதால் முதல்வர் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.பாட்டாளி மக்கள் கட்சியின் வேரூம் வியர்வையும் தைலாபுரத்தில் தான் உள்ளது தலைமையின் கட்டுபாட்டிற்கு கட்டுபடாமல் யார் எந்த யாத்திரை போனாலும் தொண்டனும் மக்களும் ஏற்க மாட்டார்கள்,
இது தொடர்பாக உள்துறைக்கும் காவல் துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் என்ற பெயரோடும் அடையாளத்தோடும் யார் என்ன சொன்னாலும் அதனை கேட்க வேண்டாம் என்றும் ஊடகங்கள் பதிவு செய்ய வேண்டாம் இதனை பாமக தலைமையகமான தைலாபுரத்திலிருந்து தலைவராக மருத்துவர் ராமதாஸ் சொல்லி கொள்வதாக தெரிவித்தார். தலைமையின் கட்டுபாட்டிற்கு இல்லாமல் அன்புமணி நடைபயணம் மேற்கொள்வதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையில்லாதது என கூறினார்.
10.5 சதவிகிதம் என்பது முடிந்து போனது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது சரியானது என்றும் சைபர் கிரைம் இந்திய அளவில் திறமையானதாக தமிழகத்தில் பணிபுரவர்கள் இருப்பதாகவும், அவர்கள் நினைத்து இருந்தால் 2 நாட்களில் ஒட்டு கேட்பு கருவி குறித்து கண்டுபிடித்து தெரிவித்திருக்கலாம். விரைந்து ஒட்டு கேட்பு கருவி குறித்து யார் வைத்தார்கள் என்பதை விரைந்து கண்டு பிடிக்க வேண்டும் என்றும்
தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை புரிவது நல்லது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *