

20000 ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; திமுகவின் தேர்தல் வாக்குறுதி 311 ஐ நிறைவேற்றப்பட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு….
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி மாநில அளவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.குறிப்பாக திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311ல் குறிப்பிட்டவாறு 20000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பினர் 2009 ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியும் 8,370 என்றும் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் அவர்களுக்கு 5200 என்றும் இரண்டு விதமான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேறுபாட்டை களையக்கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அந்த வகையில் இன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து இடைநிலை ஆசிரியை சியாமளா கூறும்போது, 2009 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முன்பாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் 3,170 ரூபாய் ஊதிய முரண்பாடு உள்ளது அடுத்தடுத்து நடைபெறும் ஊதிய குழுவில் இந்த முரண்பாடுகள் மேலும் அதிகரித்து வருகிறது கடந்த தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கை 311 ல் இந்த முரண்பாடுகளை சரி செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர் ஆனால் இதுவரையில் நிறைவேற்றித் தரவில்லை எனவே உடனடியாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற அடிப்படை ஊதியம் தான் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது எனவே தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் இல்லையென்றால் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்.