
சேலம் அருகே மது போதையில் தனியார் பேருந்தை ஓட்டிய டிரைவர்; கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்ஸை பறிமுதல் செய்து நடவடிக்கை….
சேலம் அருகே
மது போதையில் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை.
தனியார் பேருந்து பறிமுதல் .
நிரந்தரமாக வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை.
மது போதையில் பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் மீது வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
.
சேலம் அருகே உள்ளது காரிப்பட்டி. இந்த ஊருக்குள் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் சரியாக வந்து செல்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இன்று மாலை காரிப்பட்டி அருகே பேருந்துகள் வந்து செல்வதை கண்காணித்துக் கொண்டிருந்தனர்,
அப்போது ஆத்தூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
இந்த பேருந்தை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நிறுத்த கூறினர். ஆனால் பேருந்து நிற்காமல் வேகமாக சென்றது.
இதனால்
கோபமடைந்த அதிகாரிகள் பேருந்தை பின் தொடர்ந்து சென்று பேருந்தை வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் பேருந்து ஓட்டுநர்
கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 31 )என்பவர் அழைத்து விசாரித்தனர் அப்போது ஓட்டுனர் பிரகாஷ் உளறினார்.
இந்த விசாரணையின் போது
ஓட்டுனர் பிரகாஷ் மது குடித்திருப்பது தெரியவந்தது இதன் பின்னர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு ஓட்டுனர் பிரகாஷ் மது குடித்தது உள்ளாரா இல்லையா என பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது
அப்போது பிரகாஷ் மது குடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் பின்னர் வேறொரு ஓட்டுனர் வரவழைக்கப்பட்டு தனியார் பேருந்து சேலம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதன் பிறகு பேருந்து உடையாபட்டி அருகே உள்ள கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு தனியார் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
பிறகு
மது போதையில் வாகனம் ஓட்டிய பிரகாஷ் மீது நடவடிக்கை எடுத்து அவரது ஓட்டுநர் உரிமம் பறிமுதல்
செய்யப்பட்டது .
ஓட்டுநர் பிரகாஷ் நிரந்தரமாக வாகனங்கள் ஓட்ட தடை விதிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓட்டுநர் மது குடித்து உள்ளாரா இல்லையா என அறிந்து கொள்ளாமல் நடத்துனர் கவனக்குறைவாக இருந்ததால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.