
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற அதிமுக ஐடி விங்க் பிரமுகரை வெளியேற்ற திமுக கவுன்சிலர் கூறியதால் பரபரப்பு….
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக ஐ.டி.விங்க் புகுந்துள்ளனர் .
அவர்களை அகற்ற வேண்டும் என திமுக கவுன்சிலர் கூறியதால் பரபரப்பு.
யாரும் வரவில்லை. நிரூபியுங்கள்.
திமுக ஐ.டி .விங் தான் உள்ளது என அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக ஐ.டி .விங் புகுந்துள்ளதாக திமுக கவுன்சிலர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கத்தில் இயல்பு கூட்டம் இன்று நடந்தது .
கூட்டத்திற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார் .
இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது,
திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம் எழுந்து ,
மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக ஐ.டி .விங்கை சேர்ந்தவர்கள் புகுந்துள்ளனர் .இவர்களை உடனே அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனால் கோபமடைந்த மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி எழுந்து, வேண்டும் என்றே பொய் கூறாதீர்கள். அதிமுக ஐ.டி .விங் யாரும் வரவில்லை .திமுக
ஐ.டி விங் தான் உள்ளதாக அறிகிறேன் . எதற்கு வேண்டுமென்றே அதிமுக பெயரை கூறுகிறீர்கள் என எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
இதன் பின்னர் மேயர் ராமச்சந்திரன் திமுக கவுன்சிலர் தெய்வ
லிங்கத்தையும் ,அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தியையும் அமைதிப்படுத்தினார்.
அப்போது அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி எழுந்து மேயருக்கு முழு அதிகாரம் உள்ளது . மன்ற கூட்டத்தில் அப்படி யாரும் பங்கேற்றிருந்தால் மேயர் நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டுவிட்டு அதிமுக மீது பொய் குற்றச்சாட்டு சொல்ல கூடாது என தெரிவித்தார்.
பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
அதிமுக ஐ.டி .விங் குறித்து திமுக கவுன்சிலர் யாதமூர்த்தி பேசியதும், இதற்கு அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவ் மூர்த்தி பதில் கூறியதும் , இவர்களை மேய ராமச்சந்திரன் அமைதி படுத்தியதும் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.