இரட்டிப்பு பண மோசடியில் 1500 கோடி தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்தும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர வலியுறுத்தியும் ஜனநாயக மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்….
நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சேலம் சொர்ணபுரி அருகே உள்ள ஐயர் நகர் பகுதியில் ரீ கிரியேட்டர் ஃபியூச்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரீ கிரியேட்டர் ஃபியூச்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் ஒரு மடங்கு பணம் செலுத்தினால் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி சேலம் மாவட்டம் முழுவதிலும் சுமார் 17,000 நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.சுமார் 1500 கோடி ரூபாயை மோசடி செய்து கொள்ளை அடித்து வைத்துள்ளதாக கூறுகின்றனர்.இந்த மோசடி தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரி அடிப்படையில் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜேஷ், சத்தியபாமா ஹரி பாஸ்கர், இசாத் உள்ளிட்ட நிறுவனத்தின் லீடர்கள் மற்றும் பலர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் ஜாமினில் வெளியே வந்ததால் இதனை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இவர்கள் பதுக்கி வைத்துள்ள சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை மீட்டு முதலீடு செய்து பணத்தை இழந்த மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சேலம் கோட்டை மைதானத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய மாதர் சங்க செயலாளர் கவிதா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் குமார் கலந்து கொண்டு உரையாற்றினார் மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இரட்டிப்பு பண மோசடியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு இரட்டிப்பு பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.