நரிக்குறவர் சமூகத்தில் கல்வி தொடரமுடியாத மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க. வேண்டுமென வலியுறுத்தி குழந்தை நல அலுவலர் பார்கவி நரிக்குறவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் தொடர்ந்து படித்தால் தான் சமூகத்தில் முன்னேற முடியும் கல்வி மிக அவசியம் என்று சிறுவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
விழுப்புரம் நகர பகுதியில் உள்ள குறவர் குடிசை ஆசாகுளம் பகுதியில் வசித்து வரும் குறவர் சமூக சிறுவர்கள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஊசி பாசி மணிகள் விற்பனை செய்து கொண்டு இருப்பதாக தகவல் வந்தது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து மாவட்ட குழந்தை நல அலுவலர் பார்கவி காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் அந்த மாணவர்களை நேரில் சந்தித்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து நரிக்குறவ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். குறிப்பாக தமிழக அரசு அனைவரும் கல்வி கற்க வேண்டுமென எடுத்துவரும் நடவடிக்கைகளை மாணவர்கஇடையே எடுத்து உரைத்தார். பின்னர் மாணவர்களிடம் பள்ளிக்கு செல்ல வேண்டும் நன்றாக படித்து சமூகத்தில் மதிக்கதக்க மனிதர்களாக வளர வேண்டும் எனவும் கூறினர். சிறுவர்களும் நாங்கள் நன்றாக படித்து முன்னேறுவோம் என்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் கூறினர். இதனை அடுத்து குழந்தைகள் நல அலுவலர் சிறுவர்கள் பள்ளியில் சேர நடவடிக்கை எடுத்து சிறுவர்கள் வசிக்கும் அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களை சேர்க்கப்படுவர்கள் என உறுதியளித்தார்.