


சேலம் அஸ்தம்பட்டி அருகே மத்திய சிறைச்சாலை உள்ளது இந்த வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் பெட்ரோல் பங்க் தொடங்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஆனால் இடம் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் சிறை அருகே பெட்ரோல் பங்க் திறக்க அனுமதி தரப்பட்டது இதனை அடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகம் சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டது இது இன்று காலை முதல் செயல்பட தொடங்கியது சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் மற்றும் சிறை துறை அதிகாரிகள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர் இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் டீசல் அடிப்பவர்களுக்கு 200 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது தற்போது முதற்கட்டமாக 24 நன்னடத்தை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு சுழற்சி முறையில் இவர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர் 24 மணி நேரமும் இந்த பெட்ரோல் பங்க் இயங்கும் நன்னடத்தை கைதிகளை கண்காணிக்க உதவி ஜெயிலர் ராம் விக்னேஷ் தலைமையில் சிறை காவலர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது இவர்கள் பெட்ரோல் பங்கில் இருந்து கைதிகளை கண்காணிக்கின்றனர் இது தவிர பணம் சரியாக வாங்கப்படுகிறதா என்றும் கண்காணிக்கின்றனர் மதுரை, கோவை, சென்னை, பாளையங்கோட்டைக்கு பிறகு சேலம் மத்திய சிறை அருகே சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 24 தண்டனை கைதிகளுக்கு கமிசன் அடிப்படையில் மாதாமாதம் ஊதிய தொகை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது