
சேலம் டவுனில் புகழ்பெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலயம் உள்ளது .இங்கு ஆடி திருவிழா நடந்து வருகிறது.
ஆடித்திருவிழாவை ஒட்டி சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலயத்தில் வருகிற 29ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது .
இதன் பின்னர் அடுத்த மாதம் நான்காம் தேதி சக்தி அழைப்பு நிகழ்ச்சியும், 6-ம் தேதி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
இது தவிர ஆலயத்தில் புதியதாக செய்து உள்ள திருத் தேர் வருகிற எட்டாம் தேதி
இழுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வருகிற ஆறாம் தேதி உள்ளூர் விடுமுறை விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
சேலம் மாநகர் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கல்லூரிகளுக்கு எதிர்வரும் 06.08.2025 (புதன்கிழமை) அன்று பார்வை-1ல் காணும் அரசு ஆணையின்படி, உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
மேற்படி உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசின் பாதுகாப்புக்கான மற்றும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள, மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
மேலும் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கல்லூரிகளுக்கு 23.08.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்து உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.