
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு சரபங்கா நதியின் அருகே சுடுகாடு இறந்தவரின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல சரபங்கா நதியை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் சுடுகாட்டு பாலம் பழுது அடைந்து உள்ளதால் பிணங்களை தண்ணீரில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஊரில் உள்ள மக்கள் இறந்து விட்டால் சடலத்தை புதைப்பதற்கு பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர் எனவே சாபங்கா நதியின் குறுக்கே
உடனடியாக பாலம் அமைக்ககோரி தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் வழிகாட்டுதலோடு சேலம் வடமேற்கு மாவட்ட செயலாளர் செந்தில் குமார் மற்றும் ஓமலூர் பொறுப்பாளர் பெருமாள் சீனிவாசன் அறிவுறத்தலின்படி தாராபுரம் வினோத்குமார் தலைமையில் ஊராட்சி செயலாளர்களிடம் மனு அளித்தனர்.